25.5 C
Jaffna
January 20, 2025
Pagetamil
கிழக்கு

ஓட்டமாவடி ஆற்றில் சடலம்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த சேகு இஸ்மாயில் சப்ராஸ் (மீனி) (35) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றில் தொழில் செய்யும் குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் தொழில் நிமிர்த்தம் சென்றவர் மாலை வரை வீடு திரும்பாத சந்தர்ப்பத்தில் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருவள்ளுவர் சிலைக்கும் தடை: கல்முனையில் நிலைமை!

Pagetamil

சேருநுவர-கந்தளாய் வீதியில் பஸ் விபத்து – 14 பேர் காயம்

east tamil

எரிபொருள் பவுசர் – முச்சக்கரவண்டி விபத்து

east tamil

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

east tamil

காரைதீவு நேரு சனசமூக நிலைய வருடாந்த ஒன்றுகூடலும், 75 ஆண்டு பவள விழாவும்

east tamil

Leave a Comment