அட்னன் -ஆயிஷா தம்பதிகள் மீரட்டில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தான் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
திருமணம் ஆனது முதல் கணவரின் நடத்தையில் சந்தேகம் வந்திருக்கிறது ஆயிஷாவுக்கு. கணவர் தன்னிடம் அதிக நெருக்கமாக இல்லாமல் இருந்து வந்திருக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்திருக்கிறது.
உன் புருசன் வேற ஏதோ தொடர்பு இருக்குது. அதனால்தான் உன்னோட அவன் நெருக்கமா இருக்குறது இல்ல என்று அக்கம் பக்கத்தினர் சொல்லவும், ஆயிஷாவுக்கும் அதுதான் உண்மை என்று தெரிந்திருக்கிறது. ஆனாலும், இதை ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்று காத்திருந்தார்.
கடந்த திங்கள் அன்று கணவன் வேலைக்கு சென்றபோது, ஆயிஷாவும் அவரை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். மீரட்டில் சாஸ்திரி நகர் மார்க்கெட்டிற்கு சென்றிருக்கிறார் அட்னன். அங்கே அவருக்காக காத்திருந்த பெண்ணுடன் ஜவுளி ஸ்டோர் உள்ளே சென்று காதலிக்கு டிரெஸ் எடுத்து கொடுத்திருக்கிறார்.
இதையெல்லாம் வெளியே நின்று கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார் ஆயிஷா.
நடு ரோடு என்றும் கணவனை பார்க்காமல் செருப்பை கழற்றி அடி அடி என்று வெளுத்துவிட்டார் ஆயிஷா. தடுமாறி கீழே விழுந்தவரையும் புரட்டி புரட்டி அடித்து எடுத்துவிட்டார். நடுரோட்டில் நடந்த அர்ச்சனை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து இருவரையும் அழைத்து சென்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.