Pagetamil
முக்கியச் செய்திகள்

சர்வதேசத்தில் எங்களை சிக்க வைக்காதீர்கள்: தமிழர்களிடம் கேட்கிறது கோட்டா அரசு!

சர்வதேச சமூகத்தின் ஆதரவை அரசாங்கம் இழக்கும் வகையில் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் செயற்படக் கூடாதென வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பிராந்தியத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது பெரும்பான்மையின மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்தையும் அதன் திட்டங்களையும் வடக்கு, கிழக்கு மக்களும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஒற்றையாட்சி நிலையை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment