இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இலங்கை ரூபாவில் 200 ஐ எட்டியுள்ளது.
மத்திய வங்கி வெளியிடும் தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி, ரூ .200.06 ஆகும்.
அமெரிக்க டொலரின் வாங்கும் பெறுமதி ரூ .195.28 ஆகும்.
ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க அரசாங்கம் இறக்குமதியை தடைசெய்த போதிலும், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அண்மைக்காலமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.