26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

ரணிலுக்கு ஐ லவ் யூ சொன்னவர்கள், இப்போது வந்து வீரவசனம் பேசுகிறார்கள்: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் ரணிலுக்கு ஐ லவ்யூ சொன்னவர்கள் தற்போது வீரவசனம் பேசுகின்றார்கள். இவ்வாறு ரணிலுக்கு ஐ லவ்யூ சொல்லியதால் ஒரு பயனும் கிடைக்கவில்லை என மாவட்ட இராஜாங்க அமைச்சர் ச.வியாளேந்திரன் தெரிவித்தார்.

நீர்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமுன்மாரிசோலையில் பதினெட்டு மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள அணைக்கட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அபிவிருத்தி குழுவின் உப தலைவர் ப.சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகரன் மற்றும் பொறியிலாளர்கள் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ச.வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பேசிய விடயத்தில் இருந்து எனது உரையினை தொடங்கலாம் என்று நினைக்கின்றேன். காணி விடயம். வன இலாகா, தொல் பொருள், மகாவலி. இது புதிதாக வந்த பிரச்சினை அல்ல. இந்த அரசாங்கத்தில் வந்த பிரச்சினையும் அல்ல. தொடர்ச்சியாக இந்த பிரச்சினை இருந்து கொண்டு இருக்கின்றது. கடந்த அரசாங்கத்திலும் அதற்க முன்பிருந்த அரசாங்கத்திலும் தொடர்ச்சியாக இருந்து வரும் பிரச்சினையாகும்.

கடந்த காலங்களிலே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடியவர்களில் நானும் ஒருவன். ஆகவே இந்த ஜனாதிபதியினுடைய இந்த அரசாங்கத்தில் வந்த பிரச்சினையல்ல. ஏனென்றால் கடந்த காலங்களில் எமது போராட்டங்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரானவையாக இருந்ததனை அனைவரும் அறிவீர்கள்.

கடந்த அரசு காலத்திலே எமது மாவட்த்தில் 600 க்கும் மேற்பட்ட இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் இதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். ஆனால் கடந்த அரசுக்காலத்திலே சம்பந்தன் ஐயாவின் தலமையிலே பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினை பாதுகாத்தோம். நானும் ஒருவன். பாதுகாப்பென்றால் அது சும்மா பாதுகாப்பல்ல. வரவு செலவுத் திட்டத்தில் பல முறை பாதுகாத்தோம்.பிரதமருக்க எதிரான நம்பிக்கையில்லா தீர்மாத்தில் பாதுகாத்தோம். இவ்வாறு கடுமையாக பாதுகாத்தோம். ஆனால் பல்லுக் குத்துவதற்கு ஈக்கில் கூட எமது மக்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு தொழில்சாலை திறக்கப்படவில்லை. நீர்ப்பாசன அபிவிருத்திகள் செய்யப்படவில்லை. பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்படவில்லை. என்ன நடந்தது? எதுமே நடக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த இவ்வாறான தங்க சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விட்டார்கள். இவ்வாறான சந்தர்ப்பம் இனி சரித்திரத்திலும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த தங்க சந்தர்ப்பத்தை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்குரிய புரையோடி போயிருக்கின்ற எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வும் கண்டிருக்கலாம். பல அபிவிருத்தி திட்டங்களையும் செய்திருக்கலாம்.

ஆனால் இப்போது இந்த அரசாங்கத்தினை பொறுத்தளவில் எமது மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு விழுந்த வாக்குகள் முப்பதெட்டாயிரமாகும். ஆனால் சஜித் பிறேமதாசவுக்கு இரண்டு இலட்சத்தி முப்பத்தொன்பதாயிரம் வாக்குகள் விழுந்தது. இதே மாவட்டத்தில் பராளுமன்ற தேர்தலில் முப்பத்தி மூவாயிரம் வாக்குகளை நாங்கள் பெற்றோம். இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளது என நினைத்து எமது மாவட்டத்திற்கு எவ்விதமான பாராபட்சங்களும் காட்டப்படவில்லை.

எனவே எமது மாவட்டத்தை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டும். நான் இதற்காக அன்பு சகோதரர் சாணக்கியன் அவர்களுக்கு நன்றி கூறவேண்டும். அவர் அபிவிருத்தி சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவு தருவதாக கூறியிருக்கின்றார். இதற்காக நன்றி கூறுகின்றேன். நான் பாராளுமன்றத்தில் இதனை சம்பந்தன் ஐயாவிடம் வெளிப்படையாக கூறியிருந்தேன். வருங்கள் ஒன்றாக இணைந்து இந்த மாவட்டத்தை கட்டியெழுப்புவோமென்று.

எமது மாவட்டத்தில் சரியான போக்குவரத்து வசதியின்றி எத்தனை மக்கள் இறந்துள்ளனர் என்பது யாருக்கும் தெரியுமா?. சரியான சுகாதார வசதிகள் கிடைக்காமல் எத்தனை மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. இதற்கு யார் காரணம்?. இதற்கு யார் பதில் கூறுவது? இவ்வாறு மக்கள் இருக்கதக்கதாக கடந்த அரசாங்கத்திலே எமது தலைவர்களின் கோரிக்கைக்கு அமைய வாக்களித்து விட்டு ரணிலிடம் செல்வது ரணில் சேர் குட்மோர்ணிங் சேர், ஹாய் சேர், ஹவ் ஆர் யூ சேர், ஐ லவ்யூ சேர், ஐ லவ்யூ ரூ சேர்,என்று சொல்லிவிட்டு ஏதாவது கேட்பது. நிச்சயமாக செய்து தருவேன். இப்படியாக காலம் கடத்தப்பட்டது. ஒன்றும் நடக்கவில்லை.

இவ்வாறு ரணிலுக்கு ஐ லவ்யூ சொன்னவர்கள் தற்போது வீரவசனம் பேசுகின்றார்கள். இவ்வாறு ரணிலுக்கு ஐ லவ்யூ சொல்லியதால் என்ன பயன். ஒன்றுமேயில்லை வாழைச்சேனை காகித தொழில்சாலையை திறந்து தாருங்கள், திறந்து தாருங்கள் என்று வாய்கிழிய கத்தினோம். தொழில்சாலை யன்னலைக்கூட திறக்க முடியவில்லை.

ஆகவே நாங்கள் மக்களுக்கு ஆக்க பூர்வமாக எதாவது செய்யவேண்டும். இன்று அனைத்து பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்துள்ளது. நீர்ப்பாசன வேலைகள் நடைபெற்று வருகின்றது. வீதிகளுக்கு வேலைகள், குடிநீர் வேலைகள், எமது மாவட்டத்தில் இலங்கையில் பாரிய முதல்தர ஆடைதொழிற்சாலை, வழைச்சேனை காகித தொழிற்சாலை இயங்குகின்றது. இவ்வாறு பல துறைகளிலும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. நாம் எமது மாவட்த்தினை கட்டியெழுப்ப என்றும் பாடுபடுவோம் என தெரிவித்தார்.

-பழுகாமம் நிருபர்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

சல்லி கோயில் ஆக்கிரமிப்பு

east tamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

Leave a Comment