புர்கா இன்னும் தடைவிதிக்கப்படவில்லை; யோசனை மட்டுமே: வெளிவிவகார அமைச்சு!

Date:

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்க அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்க முன்மொழிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இது விவாதத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு அடிப்படையில் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் ஒரு பரந்த உரையாடலைத் தொடங்கும் என்றும் தேவையான ஆலோசனைகள் மேற்கொள்ளவும் ஒருமித்த கருத்தை எட்டவும் போதுமான நேரம் எடுக்கப்படும் என்றும்  கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்