மன்னாரில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வயோதிபர் ஒருவர் மீண்டும் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(15) மதியம் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் கடமையாற்றிய 86 வயதுடைய வயோதிபர் என தெரிய வந்துள்ளது.
குறித்த வயோதிபருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த வயோதிபர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வயோதிபருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(15) மதியம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.