அளவுக்கு அதிகமான வியாபார நிலையங்களால் வருமானம் இழந்து நிற்கின்றோம்: சந்தை வர்த்தகர்கள் கவலை

Date:

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நாளுக்கு நாள் புதிய புதிய வியாபார
நிலையங்கள் வழங்கப்பட்டு வருகின்றமையால் தாம் வருமானம் இழந்து
நிற்கின்றோம் என சேவைச் சந்தையின் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஆரம்பத்தில் மரக்கறி, மீன், புடவை, பான்சி
என 325 கடைகள் காணப்பட்டன. இந்தச் சந்தையை பயன்படுத்துகின்ற மக்கள்
தொகைக்கு மேற்படி எண்ணிக்கை வியாபார நிலையங்களே அதிகமாக இருந்தன. இதனால் அக் காலத்திலேயே போதுமான வருமானமின்றி தங்களது வாழ்வாதாரத்திற்காக கடைகளை வியாபாரிகள் நடத்தி வந்தனர்.

ஆனால் தற்போது கரைச்சி பிரதேச சபை புதிதான நூற்றுக்கு மேற்பட்ட வியாபார
நிலையங்களை வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் புதிய புதிய கடைகள் கட்டப்பட்டு
வருகின்றன. வாழ்வாதாரத்திற்காக வழங்குவதாக தெரிவித்து இக் கடைகள்
வழங்கப்படுகின்றன. இதனால் ஏற்கனவே வருமானமின்றி காணப்பட்ட வியாபாரிகள்
மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, புதிதாக வாழ்வாதாரம் எனும்
போர்வையில் வழங்கப்படுகின்ற கடைகளை பெறுகின்றவர்களும் வருமானமின்றியே
காணப்படுவர். எனவே இது தொடர்பில் சந்தை வர்த்தக சங்கமும் வர்த்தகங்களின்
நலன் கருதி செயற்படவில்லை சங்கத்தில் உள்ளவர்கள் அரசியல் கட்சி ஒன்றின்
பிரதிநிதிகள் என்பதனால் அவர்கள் கட்சி நலன்களுக்கு முக்கியத்துவம்
கொடுகின்றார்களே தவிர வர்த்தகளின் நலன்களுக்கு அல்ல எனவும் சந்தை
வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேசசபையின் செயலாளரை தொடர்பு கொண்டு
வினவிய போது கரைச்சி பிரதேச சபைக்கு வாழ்வாதார நோக்கத்திற்குகாக
விண்ணப்பிக்கின்றவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டு
அமைக்கப்பட்டுள்ள குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக வியாபார நிலையங்கள்
வழங்கப்படுகிறது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்