26.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவது பற்றி பரிசீலிக்க பிரித்தானிய உள்துறை செயலாளருக்கு உத்தரவு!

தமிழீழ விடுதலைப் பலிகளின் மீதான தடையை  மறு பரிசீலனை செய்ய பிரித்தானியா உள்துறை செயலாளர் பிரிதி படேலுக்கு, தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மேல்முறையீட்டு ஆணையம் (POAC),
2000 பயங்கரவாத சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பாகும். இந்த அமைப்பு, அரசாங்கத்தின் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்குவது குறித்து உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை, பிரித்தானியா 2001 இல் தடை செய்தது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அண்மையில் இந்த தடைக்கு எதிராக தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மேல்முறையீட்டு ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

எவ்வாறாயினும், பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலை மதிப்பிடும் கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம் (ஜே.டி.ஏ.சி), வன்முறையை கைவிடத் தவறியதால் விடுதலைப் புலிகள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்தத் தடையை உள்துறை அமைச்சர் படேல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று POAC தீர்ப்பளித்தது, அதை புதுப்பிப்பதற்கான காரணங்கள் குறைபாடுடையவை என்று கூறப்பட்டுள்ளது.

தடை நீக்கம் குறித்து, நாடு கடந்த தமிழீழ அரசு  மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தனி முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சு குறிப்பிடுகையில், ‘நாங்கள் POAC இன் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.  இது குறித்த மேல்முறையீட்டாளரின் இறுதி பதிலுக்காக காத்திருக்கிறோம். இந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது. ’

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

Leave a Comment