மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஜோடி ஷாய் ஹோப்- எவின் லூவிஸ் ஜோடி மீண்டும் மிரட்ட, 2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வீழ்த்தியது.
இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நோர்த் சவுண்ட் மைதானத்தில் நேற்று நடந்தது..
நாணய சுழற்சியில் வெற்றப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானத்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
50 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டை இழந்து தத்தளித்த போது, தனுஷ்ன குணதிலக, தினேஷ் சந்திமல், வனிந்து ஹசரங்க ஆகியோரின் ஆட்டத்தால் இலங்கை ஓரளவு நல்ல இலக்கை எட்டியது.
தனுஷ்க குணதிலக 96 ஓட்டங்கள் (96 பந்து, 10 பௌண்டரி, 3 சிக்சர்), தினேஸ் சந்திமால் 71 ஓட்டங்கள் (98 பந்துகள், 3 பௌண்டரி, 2 சிக்சர்), வனிந்து ஹசரங்க 47 ஓட்டங்கள் (31 பந்துகள், 2 பௌண்டரி, 4 சிக்சர்) பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் ஜேசன் மொஹமட் 47 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இலக்கை விரட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 49. 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பாக எவின் லூவிஸ் 103 ஓட்டங்கள், ஷாய் ஹோப் 84 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் திசர பெரேரா 45 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுகள், நுவான் பிரதீப் 66 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது,
முன்னதாக ரி20 தொடரையும் மேற்கிந்தியத்தீவுகள் அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.