31.3 C
Jaffna
March 28, 2024
குற்றம்

மாற்றான் மனைவியில் மையல்…நீருக்கடியில் மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்டிருந்த சடலம்: சிக்கிய இராணுவ வீரர்!

டாம் வீதியில் சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம், பேயோட்ட அடித்ததில் உயிரிழந்த சிறுமி என அடுத்தடுத்து வெளியான பரபரப்பு செய்திகளினால் அவ்வளவான பேசப்படாமல் போன ஒரு கொடூர குற்றத்தின் கதை இது.

கோகிலவத்தை, அங்கொடையை சேர்ந்த தல்பே லியனகே சசங்க சந்துருவன் (31) என்ற நபரின் உடல் எச்சங்கள், மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்டு நீருக்குள் போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இராணுவ கொமாண்டோ பிரிவில் பணியாற்றிய அவர், பின்னர் அதிலிருந்து விலகினார்.  தரகர்  வேலையுடன், முச்சக்கர வண்டியும் ஓட்டி வந்தார். இராணுவத்திலிருந்து விலகினாலும், இராணுவத்திலிருந்த, இராணுவத்திலிருந்து விலகிய சிலருடன் நெருக்கமாக பழகி வந்தார். பிரபல பாதாள உலககுழு தலைவன் அங்கொட லொக்காவுடன் நெருக்கமான அசங்க என்பவனுடனும் பழகி வந்தார். அங்கொட லொக்காவை தனக்கு தெரியுமென நண்பர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜனவரி 31ஆம் திகதி முதல் சசங்க காணாமல் போயிருந்தார். அவரது மனைவி, வெல்லம்பிட்டி பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அன்று மாலை அவருக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாகவும், மேலதிகமாக ஹெல்மெட் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லையென மனைவி தெரிவித்தார்.

வெல்லம்பிட்டி பொலிசார் விசாரணை நடத்தினர். எனினும், காணாமல் போனவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

பெப்ரவரி 11ஆம் திகதி ஹொரண பொலிஸ் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு மீனவர் அந்த அழைப்பை மேற்கொண்டார். மீன்பிடிக்க சென்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்டபடி மனித எலும்புக்கூடு ஒன்று நீருக்குள் இருப்பதாக தெரிவித்தார்.

ஹொரண பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் ஒரு மனித உடல் கட்டப்பட்டிருந்தது. அது சிதைந்திருந்தது.

உடலை மறைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கட்டி நீருக்குள் போடப்பட்டிருந்ததை பொலிசார் உணர்ந்தனர். வறட்சி காரணமாக நீர்நிலையின் நீர்மட்டம் குறைந்ததால் உடல் வெளித்தெரிந்தது.

மோட்டார் சைக்கிள் இயந்திர இலக்கத்தின் அடிப்படையில், அதன் உரிமையாளராக கணேமுல்ல பகுதியை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளை அவர் ஏற்கனவே விற்பனை செய்தது தெரிய வந்தது. பலரிடம் அது கைமாறியிருந்தது.

மோட்டார்சைக்கிளின் காப்புறுதி விபரங்களின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், மேலுமொரு தொலைபேசி இலக்கம் அடையாளம் காணப்பட்டது. ஆனால் அந்த இலக்கம் ஜனவரி 31ஆம் திகதிக்கு பின்னர் இயங்கவில்லை.

பொலிசார் அந்த தொலைபேசி இலக்கத்திற்குரியவரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு ஒரு பெண் இருந்தார். அந்த இலக்கம் கணவரிற்குரியதென்றும்,  அவரை ஜனவரி 31ஆம் திகதிக்கு பின்னர் காணவில்லையென்றும் தெரிவித்தார்.

ஹொரணவில் உடலுடன் கட்டப்பட்ட மோட்டார் சைக்கிள், தனது கணவர் சசங்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்தான், அது கணவரின் நண்பரிற்குரியது என அந்த பெண் அடையாளம் காட்டினார்.

ஆற்றிற்குள்ளிருந்து மீட்கப்பட்ட ஆணின் ஆடைகள் தனது கணவருடையது என அந்த பெண் அடையாளம் காட்டினார்.

சசங்கவின் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்களை பொலிசார் பரிசோதித்த போது, ஒரு இலக்கத்தில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த இலக்கத்திற்கு உரியவர் கணேமுல்லை கொமண்டோ ரெஜிமண்ட் தலைமையகத்தில் பணிபுரியும் 32 வயதான இராணுவ வீரர் லக்மல்.

அவரிடம் விசாரணை நடத்துவதற்கு முன்னர், அவரது மனைவியை ஹொரண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிசார் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது கணவருடன் பணியாற்றிய கசங்கவை நன்றாக தெரியும் என கூறினார்.

கசங்க பலமுறை எங்கள் வீட்டிற்கு வந்தார் என அந்தப் பெண் தெரிவித்தார்.

“கசங்க, தொலைபேசி அழைப்புக்களின் மூலமும் குறுஞ்செய்திகளின் மூலமும் என்னுடன் அத்துமீறி நடக்க முயன்றார். வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டினார். இதை நான் என கணவர் லக்மலிடம் கூறினேன்“ என்றார்.

லக்மல் தொலைபேசியில் கசங்கவை தொடர்பு கொண்டு, “அசிங்கமான காரியம் செய்யாதே“ என மிரட்டினார்.

இதன்பின்னர் இருவருக்குமிடையில் அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

கசங்க தனக்கும், மனைவிக்கும் ஆபத்தை விளைவிக்கலாமென லக்மல் அஞ்சினார். அங்கொட லொக்காவின் பாதாள உலகக்குழுவுடன் தனக்கு தொடர்புள்ளதாக கசங்க கூறியதையும் நினைத்து லக்மல் அஞ்சினார்.

கொமாண்மோ பிரிவிலிருந்து விலகி, கணேமுல்லவில் தச்சு பணிபுரிந்து வந்த சுரேஷ் (26) என்பவருடன் சேர்ந்து, கசங்கவை தீர்த்துக்கட்ட, லக்மல் திட்டமிட்டார்.

அதன்படி, ஜனவரி 31ஆம் திகதி  காலையில் கசங்கவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார் லக்மல். தான் கடுவெல பகுதியில் வந்த இடத்தில் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளதாகவும், தன்னை வீட்டிற்கு அழைத்து செல்ல மோட்டார் சைக்கிளில் வர முடியுமா என கேட்டார்.

லக்மலை வீட்டிற்கு அழைத்து செல்வதில் கசங்கவிற்கும் சந்தோசமே. காரணம், லக்மலின் மனைவியை பார்க்கலாமே!

உடனே கிளம்பி விட்டார்.

கடுவெலவில் லக்மலை ஏற்றிக்கொண்டு கசங்க கிளம்பினார். பியர் குடித்து விட்டு செல்லலாம் என கூறி, இடையில் சில பியர் கான்களை வாங்கினர். சுரேஷூம் அவர்களை பின்தொடர்ந்தார்.

ஹொரண, மவாக் ஓயா, புஹுவல, காட்டு பேக்கரி பகுதிக்குச் சென்று பியர் குடித்துக்கொண்டிருந்த லக்மலுக்கும் சசங்கவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
தனது மனைவியை கசங்க தொல்லைப்படுத்துவதாக கசங்க குற்றம்சாட்டினார். வாய்த்தர்க்கம் முற்றி, லக்மல் அடித்தே கசங்கவை கொன்றார்.

அடித்து கொல்லப்பட்ட சசங்கவின் உடல், மோட்டார் சைக்கிளில் கயிறுகளால் கட்டப்பட்டு மவக் ஓயாவில் வீசப்பட்டது. மூழ்குவதற்கு முன்பு மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்களும் அகற்றப்பட்டன.

லக்மல் விடுமுறையை முடித்து, 6ஆம் திகதி கணேமுல்ல முகாமிற்கு திரும்பி வரும் போது ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஒப்புதல் வாக்குமூலத்தில் சுரேஷ் அதே நாளில் கணேமுல்லவில் கைது செய்யப்பட்டார்.

சுரேஷ் மற்றும் லக்மல் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஹொரண காவல்துறையினர் 48 மணி நேர தடுப்பு உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இருவரிடமிருந்தும் கிடைத்த தகவலின் அடிப்படையில், மவக் ஓயாவில் சசங்கவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நீருக்கடியில் தேடுதல் நடத்தி சசங்கவின் சூட்கேஸ், தொப்பி மற்றும் ஒரு ஜோடி காலணிகளைக் கண்டுபிடித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment