பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட மாணவியொருவர், 186வது முயற்சியில் அதிகாரிகளை தொடர்பு கொண்ட தகவல் கிடைத்துள்ளது.
அநுராதபுரத்தை சேர்ந்த மாணவியொருவர் அவசரத் தேவை குறித்த தகவல்களைப் பெற பத்தரமுல்லை கல்வி அமைச்சகத்திற்கு (இசுருபயா) நேற்று (12) காலை முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
காலை 9 மணிக்கு முயற்சியை ஆரம்பித்தார். ஆனால் பதிலில்லை. அவசர தேவை கருதி முயற்சியை கைவிடாமல், தொடர்ந்து முயற்சித்தார்.
அவர் 185 முறை முயற்சித்தும் பலனிருக்கவில்லை. யாரும் பதிலளிக்கவில்லை. மதியம் 1.30 மணியளவில் 186வது முறையில்தான் பதிலளிக்கப்பட்டது.
பொதுச்சேவைகளின் நிலைமையை இந்த சம்பவத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியுமென சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
1
+1
1
+1
+1
+1
1
+1
1
+1