25.8 C
Jaffna
January 27, 2025
Pagetamil
விளையாட்டு

அம்பாறையின் 26 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ள றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி!

சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ம் திகதி சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் ஆரப்பமாகவுள்ள “றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டியில்” கலந்து கொண்டு விளையாடவுள்ள அணிகளை அறிமுகம் செய்யும் நிகழ்வும் பிரிவுகளை தெரிவு செய்தல் நிகழ்வும் விளாஸ்டர் விளையாட்டு கழக தவிசாளர் ஏ.எல். முஹம்மட் தலைமையில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இன்று (12) மாலை நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் 26 முன்னணி விளையாட்டு கழகங்களை கொண்ட இந்த சுற்றுப்போட்டியானது குழுக்கள் முறையில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன் சகல விளையாட்டு கழங்களுக்கும் போட்டியின் விதிக்கோவைகள், எடுத்துரைக்கப்பட்டது.

இந்த சுற்றுபோட்டியின் சம்பியன் பட்டத்தை பெரும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 20,000 ரூபாய் பணப்பரிசும், இரண்டாவது இடத்தை தக்க வைக்கும் அணிக்கு 10,000 பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட உள்ளது. மாத்திரமின்றி தொடர்நாயகன், ஆட்டநாயகன், சிறந்த வீரர் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாரம்ப நிகழ்வில் தொடரின் பிரதான அனுசரணையாளரான றபீக் கட்டுமான நிறுவனப் பணிப்பாளர் ஏ.எம். றபீக், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் காண்டிபன், சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஆர்.எம்.இம்தாத், பொதுச் செயலாளர் ஏ.சி.எம். நிஸார், முகாமையாளர் எம்.ஐ.எம். பஸ்மீர், பொருளாளர் சி.எம். முனாஸ், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். றஜாய்  உட்பட  சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் முக்கியஸ்தர்கள், ஏனைய கழகங்களின் பயிற்றுவிப்பாளர்கள், தலைவர்கள், செயலாளர்கள், முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

Leave a Comment