வடக்கு ஆளுனருக்கு அவசர கடிதமெழுதிய செல்வம் எம்.பி!

Date:

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (12) வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ்சிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் குறிப்பாக வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு வருகின்ற நோயாளிகள் கோடைக் காலத்தில் வெயிலிலும் மழைக் காலங்களில் மழையிலும் நின்று மருத்துவ உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த சிரமத்தைத் தனிக்க நடவடிக்கை எடுக்கவும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவும் ஒரு மில்லியன் ரூபாய் நிதி தேவை என்றும் ஏகமனதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவை மீண்டும் மறுசீரமைத்து அங்கத்தவர்களை இணைத்து செயல்பாடுகளையும் செயல் படுத்து வேண்டும்.

எனவே குறித்த பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்