சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் புத்தளம் அல் சுஹாரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹமட் ஸாகீர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்காக சட்டமா அதிபரால் இந்த குற்றப்பத்திரம் அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சர்வதேச குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1