மன்னாரில் யானை தாக்கி முதியவர் பலி!

Date:

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(12) மதியம் மடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார்.

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியானவர் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நருவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த என்.எம்.ஆபிரகாம் (69) என தெரிய வந்துள்ளது.

தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் மூவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது திடீர் என அப்பகுதிக்கு வந்த யானை குறித்த மூவரையும் துரத்தியுள்ளது.

இதன் போது இருவர் தப்பிச் சென்ற நிலையில் குறித்த வயோதிபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இலுப்பைக்கடவை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டதோடு, மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் முன்னாள்...

கட்டாயம் பிரசுரித்து தரவும். நன்றி : அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கல்வியாளர்களையும் சாதனை மாணவர்களையும் கௌரவித்த ‘PEARLS – SEASON 07’

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வியாளர்களை...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்