27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 10வது நாளாகத் தொடர்கிறது போராட்டம்: அறிவிப்பின்றி கூடாரங்களை அகற்றிய பொலிஸார்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 10ஆவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இந்தச் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்ற நிலையில்> இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை போராட்டம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரமும் பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பொலிஸாரினால் இவை அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் குடைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டததை முன்னெடுத்தனர்.

இதேவேளை, கூடாரம் மற்றும் பதாகைகள் அகற்றப்படடமை தொடர்பாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்வதற்குச் சென்றவேளை, கூடாரம் உள்ளிட்டவற்றை தாமே அகற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகவே குறித்த கூடாரம் உள்ளிட்டவை அகற்றப்பட்டதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நீதிமன்றக் கட்டளை தொடர்பாக எந்தவித அறிவிப்புகளும் தமக்கு வழங்கப்படாமல், எவ்வித முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் தன்னிச்சையாக இந்தச் செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்இ இது சட்ட விரோதமான செயலென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவுசெய்துள்ளதாக அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சாத்வீக ரீதியான, அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நீதி கோரிய போராட்டம் அனைத்துத் தடைகளையும் தாண்டி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்துஇ மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவிக்கையில், ‘நாங்கள் போராட்டம் நடத்தும் கூடாரங்களை அகற்றிச் சென்றமையானது இந்த நாட்டில் நீதி செத்துவிட்டது என்பதையும் அநீதி தலைவிரித்தாடுவதையும் காட்டுகிறது.

எனினும் நாம் சுடும் வெயிலிலும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பதற்காகப் போராடி வருகிறோம். கடந்த 11 வருடங்களாக நாம் முன்னெடுக்கும் போராட்டங்களிலும் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

எனினும் மனித உரிமைகள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பல அமைப்புகள் உள்ளபோதிலும் எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கு முன்வராமல் மௌனித்துப் போயுள்ளன.

இந்த நாட்டில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதை சர்வதேச சமூகம் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Update – திருகோணமலை சர்வோதயம் அருகில் விபத்து

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

திருகோணமலை சர்வோதயம் அருகில் விபத்து

east tamil

Leave a Comment