Pagetamil
கிழக்கு

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்த கருணா!

இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு பஸ் டிப்போ முகாமையாளரை இடமாற்றக் கோரி, அங்குள்ள ஊழியர்கள் சிலர் மேற்கொண்டுவந்த சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதமரின் மட்டு.,அம்பாறை இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் உறுதிமொழியையடுத்து தற்காலிகமாக நிறைவுக்கு வந்தது.

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்பாக பந்தல் அமைத்து இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன் இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒரு பகுதியினரும் ஆதரவு வழங்கிவந்தனர்.

“முகாமையாளரே நாங்கள் அடிமைகள் அல்லர்”, “தொழில் சங்கத்துக்கு இலஞ்சம் கொடுத்து, தொழிலாளர்களை பழிவாங்காதே”, “அரக்கன் செயலாற்று முகாமையாளரை வெளியேற்று”, “தங்களது அடியாட்களை சாலை வளாகத்தினுள் அடாவடித்தனம் புரிய இடமளியாதே” போன்ற பதாதைகளை போராட்டம் நடாத்தும் பகுதியில் தொங்கவிடப்பட்டிருந்தது.

கடந்த 09ஆம் திகதி ஆரம்பமான இந்த சாகும் வரையிலான போராட்டம் தொடர்பில் பிரதமரின் மட்டு.,அம்பாறை இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இன்று போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் பணிப்பின் பேரில் நேரடியாக சென்ற இணைப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.
இது தொடர்பில் போக்குவரத்துதுறை அமைச்சர் காமினி லொக்குகேயுடனும் கலந்துரையாடிய நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் இணைப்பாளர் வி.முரளிதரன் உறுதியளித்தார்.

அத்துடன் இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சருக்கும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குமிடையில் சந்திப்பினை ஏற்படுத்தி பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

இந்த நிலையில் போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாகவும் எனினும் தமது கோரிக்கை நிறைவுபெறும் வரையில் சுகவீன விடுமுறையில் இருக்கப்போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பழச்சாறு வழங்கி பிரதமரின் மட்டு.,அம்பாறை இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் போராட்டத்தினை நிறைவுசெய்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

Pagetamil

மாட்டிறைச்சி விலையை ரூ.1700 ஆக குறைப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக்குழு!

Pagetamil

யானைகளின் முற்றுகைக்குள் சிக்கியர் மீட்பு!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

Leave a Comment