கொஹுவல, ஆசிரி மாவத்தை பகுதியில் வாகனத்துடன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் மீது டி.என்.ஏ சோதனை நடத்தப்படவுள்ளது.
களுபோவில, பாட்டியா மவத்தையில் வசிப்பவர் என கருதப்படும் வர்த்தகரின் தாய் மற்றும் சகோதரரிடமிருந்தும் மாதிரிகள் பெறப்படும்.
நேற்று இரவு 11.30 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவாக், டி.என்.ஏ பரிசோதனை உத்தரவை பிறப்பித்தார்.
சம்பவம் தொடர்பாக ஆறு நபர்களிடமிருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மவுண்ட் லவ்னியா பதில் நீதிவானின் உத்தரவின் பேரில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் பெறப்படும் என்றும் அரசு ஆய்வாளருக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணமும் அரசாங்க ஆய்வாளரால் தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.



