கொஹுவலை-ஆசிரி மாவத்தையில் பகுதியளவில் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்றிரவு 11.30 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகியிருந்ததாகவும், உயிரிழந்த நபரின் சடலமும் பகுதியளவில் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
33 வயதுடைய கலுபோவில – பாத்திய மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து இரவு உணவிற்காக கிளம்பியவர் மீண்டும் வரவில்லை.
அரச இரசாயன பகுப்பாய்வாளர், நீதிவான் சம்பவ இடத்திற்கு செல்லவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1