கிளிநொச்சி அம்பாள்குளத்தில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை
செய்யப்பட்டுள்ளதாக உடல்கூற்று பரிசோதனையில் முடிவுகள் தெரிவிக்கின்றது.
அப்பாள் குளத்திலிருந்து பெண்ணொருவர் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அந்த பெண் வைத்திருந்த பையினை பார்வையிட்டபோது தேசிய அடையாள அட்டையில் ஆறுமுகம் திலகேஸ்வரி எனவும் குடும்ப அட்டையில் இல 84 உருத்திரபுரம் பகுதி எனவும் குறிப்பட்டிருந்தது.
அந்த பகுதி கிராம அலுவலரிடம் தொடர்பு கொண்டு குறித்த இலக்கத்தினை உடைய காணி உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார்.
அந்த பெண் தமது வீட்டில் வாடகைக்கு இருப்பதாகவும் சம்பவத்திற்னு முதல்நாள் மாலை வேளையில் வைத்தியசாலைக்கு சென்று வருவதாகவும் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். அவரின் தொலைபேசி அப்போது முதல் இயங்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
37 வயதான காமராஜ் திலகேஸ்வரி எனவும் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததாகவும், 3 வயது குழந்தை ஒன்றும் இருப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன் முடிவின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,
பெண் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை செய்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மற்றும் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.