29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
குற்றம்

கடன் வழங்கும் கொப்பியை அழிப்பதற்காக கடைக்கே தீ வைத்த நபர் கைது!

களுத்துறை, தர்கா நகர் பகுதியில் கடைக்கு தீ வைத்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்தள்ளனர்.

யடடொல வீதியில் உள்ள ஆதிகரிகொட பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நேற்று (10) அதிகாலை தீ வைக்கப்பட்டது. நேற்று மாலை சந்தேகபர் கைதானார்.

எரிவாயு சிலிண்டர்கள் தீப்பற்றியதால் வர்த்தக நிலையத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பொலிசார், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

வர்த்தகருக்கு சுமார் 2.5 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது.

கடையின் பின்பகுதியில் ரோர்ச் லைட், தீப்பெட்டி என்பன மீட்கப்பட்டன. அதை தடயப்பொருளாக வைத்து பொலிசார் சோதனையிட்டனர். பொலிஸ் மேப்பநாய் மூலம், அந்த பகுதியில் வசிக்கும் 35 வயதான ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.

கடைக்கு தீ வைத்த குற்ற்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டார்.

கடையிலிருந்து பொருட்களை கடன் வாங்குவதாகவும், அந்த தொகை அதிகரித்து விட்டதால், பணத்தை செலுத்த முடியாத நிலையில், கடன் கொப்பியை அழிக்கும் நோக்கத்துடன் கடைக்கு தீ வைத்ததாக தெரிவித்துள்ளார்.

 

இதையும் படியுங்கள்

3வது காதலா?: 2வது காதலனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம்!

Pagetamil

15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தி வைத்து பாலியல் பலாத்காரம்

Pagetamil

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

யாழில் பயங்கர ரௌடிகள் கைது!

Pagetamil

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: 17 முதல் 71 வயது வரையான 4 பேர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!