இமாச்சலில் 200 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

Date:

இமாச்சல பிரதேச மாநிலத்தில் தனியார் பஸ் ஒன்று நேற்று காலை பொன்டேடி நகரிலிருந்து சம்பா நகருக்கு சென்று கொண்டிருந்தது. பன்ஜ்ராரு அருகே மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், திடீரென நிலை தடுமாறி அருகில் உள்ள 200 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் சம்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜெய் ராம் தாகுர், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டார்..

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் உடனடி நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனுக்கா ஜனாதிபதியிடமும், சவூதி மன்னருக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மனு

அனோஜனுக்கா ஜனாதிபதியிடமும், சவூதி மன்னருக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மனு அவமதிப்பான கருத்து ஒன்றை...

விசாரணைக்கு டிமிக்கி விடும் ஷிராந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப்...

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்