25.7 C
Jaffna
March 2, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் கள்ளக்காதலால் விபரீதம்: பிள்ளைகளுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி!

மட்டக்களப்பு – ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில்  குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மரணமடைந்தவரின் மனைவியும் மகனும் மற்றும் இரு பெண் பிள்ளைகளும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

கணேஸ் யோகராசா (43) என்பவரே கொல்லப்பட்டவரென பொலிஸார் கூறினர்.

இவரது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிணக்கு கொலையில் முடிந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அண்மையில் இவர் குடும்ப உறவினர்களினால் தாக்கப்பட்டு கையில் முறிவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் முரண்பாடு முற்றியுள்ளது.

அவரது மனைவியும் பிள்ளைகளும் இரும்புக்கம்பி மற்றும் பொல்லு போன்றவற்றினால் தலையில் சரமாரியாகத் தாக்கியதில் படுகாயமடைந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது உடம்பு, வாய் பகுதிகளில் அலவாங்கால் குத்தப்பட்ட காயங்கள் காணப்படுகிறது. அவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்ல்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட பெண்ணும் அவரது 23 வயதுடைய மகனும் வைத்திய சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15, 17 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாடசாலை செல்லும் மாணவிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கே. ஜீவராணி சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

குடிசைகளை எரித்த வனவளத் திணைக்கள அதிகாரிகள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!