எரிந்த நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகரின் சடலம் டி.என்.ஏ பரிசோதனைக்குட்படுத்தப்படும்!

Date:

கொஹுவல, ஆசிரி மாவத்தை பகுதியில் வாகனத்துடன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் மீது டி.என்.ஏ சோதனை நடத்தப்படவுள்ளது.

களுபோவில, பாட்டியா மவத்தையில் வசிப்பவர் என கருதப்படும் வர்த்தகரின் தாய் மற்றும் சகோதரரிடமிருந்தும் மாதிரிகள் பெறப்படும்.

நேற்று இரவு 11.30 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவாக், டி.என்.ஏ பரிசோதனை உத்தரவை பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பாக ஆறு நபர்களிடமிருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மவுண்ட் லவ்னியா பதில் நீதிவானின் உத்தரவின் பேரில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் பெறப்படும் என்றும் அரசு ஆய்வாளருக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணமும் அரசாங்க ஆய்வாளரால் தீர்மானிக்கப்படும் என்று  கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அமைச்சரவையில் மோசடிப் பேர்வழி: எச்சரிக்கும் மைத்துனர்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் விஜய் கண்காணிக்குமாறு லஜக தலைவர் ஜோஸ்...

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்