2020 க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள் திருத்த பணிகள் மார்ச் 27 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இந்த மாதம் 1 ஆம் திகதி தொடங்கிய க.பொ.த சாதாரண தர பரீட்சை எந்தவொரு பெரிய சம்பவங்களும் இன்றி இன்று நிறைவடைந்தது.
இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 622,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினார்கள். கொரோனா தொற்றிற்குள்ளான 62 மாணவர்களுடன், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 322 மாணவர்களும் பரீட்சைக்கு தொற்றியிருந்தனர்.
அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் மே மாதத்தில் நடைபெறும்.
ஜூன் மாதத்தில் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கும் ஜூலை மாதத்தில் உயர்தர வகுப்புகளைத் தொடங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1