இளைஞரை கடத்திச் சென்றது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்வதற்கான பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுக் கொண்டது.
பிடியாணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி அமல் ரட்ணராஜா இன்று காலை வெளியிட்டார்.
முன்னாள் எம்.பி. பிரேமச்சந்திர தனது சட்ட பிரதிநிதிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி, பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்ட பல நிமிடங்களுக்குப் பிறகு, ஹிருணிகா பிரேமச்சந்திரா நீதிமன்றத்திற்கு வந்தார்.
இந்த வழக்கு ஜூன் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் ஒரு கடையில் பணிபுரிந்த ஒரு இளைஞரைக் கடத்தி, அவரை பிணைக் கைதியாக வைத்திருந்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திர மீது சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்தார்.