Pagetamil
இலங்கை

ரி.ஐ.டி விசாரணைக்கு எதிராக கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள் வாயை கட்டி போராட்டம்!

கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்காக அழைத்துள்ளமை காரணமாக பிரதேச சபையினை தவிசாளர் 5 நிமிடங்கள் வரை ஒத்தி வைத்து சபைக்குள் தங்கள் வாயை கறுப்புத் துணியால் கட்டி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதியை மீள விசாரணைக்கு அழைக்கப்படுவதென்பது மக்கள் பிரதிநிதிகள் மக்களோடு சேர்ந்து பயணிக்க அச்சம் கொள்ள வைக்கிறது எனவும் தெரிவித்து இன்றைய தினம் போராட்டத்தில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

பிரதேசசபை உறுப்பினர் செல்வநாயகம் என்பவரே விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர், இந்த சபை அமைந்த நாள் தொடக்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் தமது சபை பாரிய நெருக்ககடிகளை எதிர்நோக்குகிறது. வள்ளுவர் சிலையில் ஈழம் என்ற சொல் இருப்பதாக கூறி முதன்முதலில் விசாரணை ஆரம்பித்தனர். பின்னர் அக்கிராச மன்னன் திறப்பு விழா தொடர்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைப்பது தொடர்பிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமைக்காக தவிசாளர் உபதவிசாளர் உறுப்பினர்கள் சிலர் பொலீசாரினால் விசாரணை செய்ய அழைக்கப்பட்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக உறுப்பினர் செல்வநாயகத்திற்கு தற்போது அழைப்பு வந்திருக்கிறது. இப்போது இந்த நாடே கொரோனா நோயினால் அச்சத்துடன் இருக்கின்ற வேளையில் அவரை கிளிநொச்சியில் கூட விசாரிக்கப்படாமல் கொழும்புக்கு அழைப்பதென்பது உறுப்பினர்களை பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.

உறுப்பினர் செல்வநாயகம் விசாரணைக்காக செல்வதால் சபையில் விடுமுறையினையும் கோரி சபை அமர்வில் பங்குபற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment