நேற்றும் 4 மரணங்கள்!

Date:

நாட்டில் நேற்று (10) மேலும் 4 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, இதுவரை 515 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 08ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட் தொற்று மற்றும் உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 09 (தெமட்டகொடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 08ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலவத்துகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 23 வயதான ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 08ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான பெண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போர் இழப்பீட்டை பெற்ற பின்னரே ஹோர்முஸ் திறக்கப்படும்: ஈரான் அழுங்குப்பிடி!

ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு துணை அதிகாரியான சையத்...

லாஃப்ஸ் எரிவாயு விலையும் உயர்ந்தது!

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

தொடர்ந்து நடைபெற்று வரும் சர்வதேச மோதல் காரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்