சுவிற்சர்லாந்தில் பொது இடங்களில் புர்காவிற்கு தடை வருகிறது!

Date:

சுவிற்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அம்மாதிரியான ஆடைகளுக்கு சுவிற்சர்லாந்து தடை விதிக்கும் சட்டத்துக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் முகத்தை மறைக்கும் புர்கா போன்ற ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுவிற்சர்லாந்திலும் கடந்த சில ஆண்டுகளாக அத்தகைய ஆடைகளுக்குத் தடை வேண்டி விவாதங்கள் பரவலாக நடத்தப்பட்டு வந்தன. இந்தப் புதிய சட்டத்துக்கு எதிராகப் பொதுமக்கள் வாக்களிக்குமாறு சுவிற்சர்லாந்து அரசே வலியுறுத்தியது.

இந்த நிலையில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு எதிராக 14,26,992 பேர் வாக்களித்தனர். 13,59,621 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு சுவிற்சர்லாந்தில் விரைவில் தடை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடை அணிவது அடிப்படை வாதம் என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.

பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, ரஷ்யா, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்