கூரையிலிருந்து தவறிவிழுந்தவர் உயிரிழப்பு!

Date:

தேயிலை தொழிற்சாலையின் உரக்களஞ்சியசாலையின் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி தோட்ட தேயிலை தொழிற்சாலையின் உரக்களஞ்சியசாலையின் கூரை திருத்த பணியில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு உயிரிழந்தார்.

3 பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் அருணாசலம் (39) என்பவரே உயிரிழந்தார்.

கூரை திருத்த பணியில் ஈடுபட்டிருந்தவர் நேற்று காலை 11.30 மணியளவில் நிலத்தில் விழுந்துள்ளார். நீண்டநேரத்தின் பின்னரே காவலாளி அதை அவதானித்துள்ளார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

ஹற்றன் பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்