முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படும் இரண்டு கிலோமீட்டர் நீளமான வீதியினை புணரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்த போது மாத்தளனில் இருந்து புதுக்குடியிருப்பு ஊடாக அரைவாசி தூரம் காப்பற் வீதியாக செப்பனிடும் பணிகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டானில் இருந்து தார் வீதியாக குறித்த வீதியின் மீதி பணிகள் ஆரம்பித்த போதும் இரண்டு பகுதிகளிலும் இடைநடுவில் இரண்டு கிலோமீட்டர் தூரம் திருத்தப்பட்டாது தவறவிட்ட நிலையில் குறித்த வீதியின் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.
மழைக்காலங்களில் குறித்த வீதியில் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுவதோடு ஏனைய காலப்பகுதிகளிலும் குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியில் பயணம் செய்யும் அரச ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.