இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளிற்கிடையிலான ஒருநாள் தொடர் இன்று (10) ஆரம்பிக்கிறது.
அன்டிகுவாவிலுள்ள, சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் போட்டி இடம்பெறும். 3 போட்டிகளை கொண்ட தொடரின் அனைத்து போட்டிகளும் இந்த மைதானத்தில் இடம்பெறும்.
இலங்கை நேரப்படி இரவு 7:00 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும்.
மேற்கிந்திய தீவுகள் அணி விபரம்-
கிரான் பொல்லார்ட் (தலைவர்), ஷாய் ஹோப், ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசப், எவின் லூயிஸ், கைல் மேயர், ஜேசன் முகமது, நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர்.
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), தசுன் ஷானக, தனுஷ்க குணதிலகே, பதும் நிசங்க, அஷென் பண்டார, ஓஷாத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமல், ஏஞ்சலோ மத்யூஸ், நிரோஷன் டிக்வெல்ல, திசர பெரேர, காமிந்து மெண்டிஸ், வணிந்து ஹசரங்க , துஷ்மந்த சமீர, அகில தனஞ்ஜய, லக்ஷன் சந்தகன், தில்ஷன் மதுஷங்க, சுரங்க லக்மல்.