கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அமெரிக்க நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
சீனாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது, அமெரிக்காவில்தான். உலகம் முழுவதும், மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பைடன், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்ட நபர் உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளில் மாஸ்க் அணியாமல் பங்கேற்கலாம் என அமெரிக்காவின் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர், கொரோனா பாதிப்பு உள்ளவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும் தனிமைப்படுத்திக்கொள்ளவோ, பரிசோதனை எடுக்கவோ தேவையில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.