அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களிற்கு மார்பு வீக்கம்!

Date:

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களில் சிலருக்கு, மார்பு வீங்கி அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால், அங்கு தடுப்பூசி மிக விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் அமெரிக்காவில் பைசர் மற்றும் மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள், உள்ளரங்குகளில் முகக்கவசம் அணியாமல் சந்தித்து கொள்ளலாமென அமெரிக்க நோய்த்தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் புதிய தலைவலியாக, மொடர்னா, பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில பெண்களின் மார்பகங்கள் வீங்கியதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல பெண்கள் மருத்துவர்களை நாடி பரிசோதனைகளை செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்