24.6 C
Jaffna
January 26, 2025
Pagetamil
விளையாட்டு

ரிவி தொகுப்பாளினியை மணக்கிறார் பும்ரா?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ரிவி தொகுப்பாளினியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

27 வயதான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து விலகினார். அடுத்து நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பெறவில்லை. தனிப்பட்ட காரணத்துக்காக தன்னை அணியில் இருந்து விடுவிக்கும்படி கூறியதன் அடிப்படையில் அவர் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்வதற்காகவே 20 ஓவர் தொடரில் இருந்து ஒதுங்கியது தெரிய வந்திருக்கிறது. தமிழில் கொடி படத்தில் நடித்த நடிகை அனுபமாவை அவர் திருமணம் செய்யப் போவதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவலை அனுபமாவின் தாயார் மறுத்தார்.

தற்போது முன்னாள் மொடல் அழகியும், பிரபல விளையாட்டு டி.வி. சனலின் நிகழ்ச்சி தொகுப்பாளருமான சஞ்சனா கணேசனை பும்ரா திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இவர்களது திருமணம் மற்றும் சம்பிரதாயங்கள் கோவாவில் வருகிற 14-15ஆம் திகதிகளில் நடக்க இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை பும்ரா அல்லது சஞ்சனா தரப்பில் இருந்து இதுவரை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment