26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரில் இதுவரை 305 கொரோனா தொற்றாளர்கள்!

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 11,230 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 305 கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன் கிழமை (10) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்று (9) செவ்வாய்க்கிழமை மேலும் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மன்னார் மீன் சந்தை பகுதியில் மீன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 5 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நுண்கடன் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இருவர் மாந்தை மேற்கு பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் முதல் நிலை தொடர்பாளராகவும், ஒருவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் அலுவலகத்தில் கடமையாற்றியவரோடு நெருங்கி பழகியவராகவும், மேலும் ஒருவர் கர்ப்பிணிப் பெண் ஒருவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் முசலி பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட 83 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது எவருக்கும் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 305 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் 288 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 11 ஆயிரத்து 230 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாதம் 683 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் கா.பொ.த சாதாரண தர பரீட்சைகள் சுமூகமான முறையில் இடம் பெற்றுள்ளது.

முதல் நிலை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்த மூன்று மாணவர்கள் சுகாதார பிரிவின் போக்கு வரத்து வசதி ஊடாக குறித்த பரீட்சையில் தோற்றி இன்றைய தினம் புதன் கிழமை(10) பரீட்சையை நிறைவு செய்துள்ளனர்.

நாளைய தினம் வியாழக்கிழமை(11) மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இடம் பெற உள்ள மஹா சிவராத்திரி நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்களுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெற உள்ளது.

கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment