வடக்கு, கிழக்கு காணி அபகரிப்பு பற்றிய கலந்துரையாடல்: நவநீதம்பிள்ளையும் கலந்து கொள்கிறார்!

Date:

வடகிழக்கு தமிழர் தாயத்தில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் முன்னாள் ஜநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்
நவநீதம்பிள்ளை உள்ளிட்ட பலரும் பங்கெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஒக்லண்ட்
பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டலுடனான காணொளி
கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அவர் இச்சந்திப்பிற்கென அனைத்து
மட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்க ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டல் கருத்து தெரிவிக்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள்
ஆகியுள்ளபோதிலும் வடக்கில் இன்னமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார்
காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளதாக ஆய்வு அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்;டார்.

தமது ஆய்வறிக்கை அமெரிக்க அரசிற்கும் ஜநா ஆணையாளரிற்கும்
கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்ததுடன் இணை அனுசரணை நாடுகளிற்கும்
வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

ஆயினும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான தமது போராட்டத்தை தமிழ் மக்கள்
தொடரவேண்டுமென கேட்டுக்கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் தமது பணியை தளரவிடாது முன்னெடுக்கவும் கோரியிருந்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியின் வெற்றியானது சர்வதேசத்திற்கு தமிழ்
மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்த அனுராதா
மிட்டல் அதனை முன்னின்று செயற்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்
எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வேலன் சுவாமிகள் மற்றும் வடமாகாண முன்னாள்
முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சில செய்தியாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” – திருமாவளவன் திடீர் அறிவிப்பு

“எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என விசிக தலைவர்...

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் இன்றும் தொடரும்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை...

வவுனியாவில் கஞ்சாவுடன் 2 பொலிஸ்காரர்கள் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்