சிவனுக்கு உகந்த மாசி நிறைவு பிரதோஷம்; மகா சிவராத்திரி

Date:

மாசி மாதத்தின் பிரதோஷமும் மகா சிவராத்திரியும் அடுத்தடுத்த நாள் வருகிறது. 10ஆம் திகதி பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வோம். மறுநாள் 11ஆம் திகதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. இந்த இரண்டு நாட்களும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபூஜையில் கலந்துகொள்வோம். சிவபெருமானுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை கண்ணாரத் தரிசித்து மனதார பிரார்த்தனை மேற்கொள்வோம்.

மாதந்தோறும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளும் திரயோதசி திதியானது வரும். திரயோதசி என்பதே பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

பிரதோஷம் என்பது சிவனாருக்கு உரிய மிக முக்கியமான நாள். திதியில் திரயோதசி, நட்சத்திரத்தில் திருவாதிரை என சிவபெருமானை போற்றி வணங்கக் கூடிய நாட்கள் ஏராளம் அமைந்திருக்கின்றன.

திரயோதசி நாளில், பிரதோஷம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம். இந்த நேரத்தில், அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ பூஜை விமரிசையாக நடைபெறும். நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

அப்போது இறைவனுக்கும் நந்திதேவர் பெருமானுக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். அதேபோல் சிவபெருமானுக்கு செவ்வரளி மலர்களும் வில்வமும் சார்த்தி பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

மாசி மாதத்தின் நிறைவுப் பிரதோஷமானது 10ஆம் திகதி புதன்கிழமை வருகிறது. இந்தநாளில், சிவாலயம் சென்று சிவனாரை கண் குளிர தரிசனம் செய்யலாம். மனதார பிரார்த்தனைகள் செய்து கொள்ளலாம்.

மாசி மாதத்தில் சிவபெருமானுக்கு இன்னொரு விசேஷமான நாள், மகா சிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வரும் என்றாலும் மகா சிவராத்திரி மாசி மாதத்தில்தான் வரும். இந்த அற்புதமான நாளில், விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள்.

வழக்கமாக, காலையில் நடை திறக்கப்பட்டு மதியம் நடை சார்த்தப்படும். பின்னர் மாலையில் திறக்கப்பட்டு இரவு 8 முதல் 9 மணிக்குள் நடை சார்த்தப்படுவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரிப் பெருவிழா நாளன்று, இரவில் நடை திறந்திருக்கும். அப்போது ஒவ்வொரு கால பூஜையும் விமரிசையாக நடந்தேறும்.

மகா சிவராத்திரி நாளில், காலை முதலே விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். இரவு தரிசனம் முடிந்து, மறுநாள் காலையில் விரதத்தை நிறைவு செய்கிற பக்தர்களும் உண்டு.

10ஆம் திகதி புதன்கிழமை பிரதோஷமும் 11ஆம் திகதி குருவார வியாழனில், மகா சிவராத்திரியும் வருகிறது. அற்புதமான இந்த இரண்டு வைபவங்களையும் மனமொருமித்து சிவ சிந்தனையில் திளைப்போம். வாழ்வில் சகல யோகங்களையும் ஞானத்தையும் தந்தருளுவார் சிவனார்!

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்