அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இரத்து செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, உறுப்பினர்கள் சந்திரசிறி ஜெயதிலக மற்றும் சந்திர பெர்னாண்டோ மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இயற்கை நீதிக் கொள்கைகளுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை விடுவித்து புகார் அளிப்பவர்கள் மீது வழக்குத் தொடர ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாகவும் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அவரது சிவில் உரிமைகளை இடைநிறுத்தக்கூடும் என்றும் அவரது உரிமைகள் ஆணைக்குழுவால் மீறப்பட்டுள்ளதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.