முல்லைத்தீவில் கறுப்பு உடையணிந்து மாபெரும் போராட்டம்!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சர்வதேச மகளிர் தினமான இன்று (08) துக்க தினமாக அனுஷ்டித்து மகளிர் எமக்கு நீதி வேண்டும் என கோரி கறுப்பு உடையணிந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது நான்கு ஆண்டுகளை கடந்து இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

அவர்களுடைய தொடர் போராட்டத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்காத நிலையில் இன்று  சர்வதேச மகளிர் தினத்தில் நாம் வீதிகளில் தொடர்ச்சியாக போராடி வருகிறோம் ஆனால் இந்த அரசாங்கம் அதற்கான எந்தவித பதிலையும் வழங்கவில்லை என தெரிவித்து மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கே என்கின்ற நீதியான விடயங்கள் கிடைக்கப்பெற இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

இந்த வகையில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இன்று (08) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் நிறைவடைந்தது

வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் , இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து,மகளிர் தினம் எமக்கு துக்கத்தினம் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் சர்வதேசமே நீதி உன்னிடமே தெற்கில் சுதந்திரம் வடக்கில் அடக்குமுறை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே ,சர்வதேசமே இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து உள்ளிடட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.60 இலட்சம் செலவாகிறது!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான...

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்