அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் முகக்கவசம் அணியமாடோம் என தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், கொரோனா வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
நாளொன்றுக்கு 10,000இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இடாஹோ மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முகக்கவசம் அணிய மறுத்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகக்கவசம் அணிய வற்புறுத்தாதீர்கள், முகக்கவசம் அணிவதும் அணியாமல் இறுப்பதும் தங்களின் தனிப்பட்ட விருப்பம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் தெருவில் கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் லெப்டினண்ட் கவர்னர் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முகக்கவசம் கட்டாயம் என்ற ஆணைகள் தங்கள் சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என போராட்டத்தி ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசியை யாரும் போட்டுக்கொள்ள வேண்டாம் என போராட்டக்காரர்கள் அப்பகுதிகளில் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.