பூசகர் வீட்டுக்கு பெற்றோல் குண்டுவீச்சு!

Date:

வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பூசகர் வீடொன்றிற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் சென்ற இனம் தெரியாத நபர்கள் அங்கு பெற்றோல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்