27.7 C
Jaffna
September 22, 2023
சினிமா

துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி

சென்னையில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை அஜித் அணி வென்றது.

‘வலிமை’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். முழுக்கப் படப்பிடிப்பு, குடும்பம் என்று இருக்கும் அஜித்துக்கு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விளையாட்டுகள் மீது அதீத ஆர்வம் இருந்தது. அதிலும் தனது திறமையை நிரூபித்து விருதுகளையும் வென்றுள்ளார்.

பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட அஜித், சமீபமாகத் துப்பாக்கி சுடுதல் போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இதற்காகப் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சென்னை துப்பாக்கி சுடுதல் கிளப்புக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணியில் அஜித்தும் இடம்பிடித்தார். இந்தப் போட்டியில் அஜித்தின் அணி 6 பதக்கங்களை வென்றுள்ளது. அஜித் மேடையேறி, பதக்கங்களைப் பெறும் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் அணி வென்றுள்ள பதக்கங்களின் விவரம்:

* ஏர் பிஸ்டல் 10 மீ (அணி) – தங்கம்

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (32 மீ) (ஐ.எஸ்.எஸ்.எஃப்) – (25 மீ) அணி – வெள்ளி

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (32 மீ) (என்.ஆர்) – (25 மீ) அணி – தங்கம்

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (22 மீ) (ஐ.எஸ்.எஸ்.எஃப்) – (25 மீ) அணி – தங்கம்

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (22 மீ) (என்.ஆர்) – (25 மீ) அணி – வெள்ளி

* ஃப்ரீ பிஸ்டல் (22 மீ) (50 மீ) அணி – தங்கம்

சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன், தேசிய ரைஃபிள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டிவிஎஸ் ராவ், தமிழ்செல்வன் டிஜிபி, தமிழ்நாடு துப்பாக்கிசுடுதல் கூட்டமைப்பின் செயலாளர் ரவிகிருஷ்ணன், சென்னை ரைஃபிள் கிளப்பின் இணைச் செயலாளர் கோபிநாத் ஆகியோர் பதக்கங்களை வழங்கினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விஜய்யின் ‘லியோ’ இந்தி போஸ்டர் வெளியீடு

Pagetamil

‘அவளுடன் நானும் இறந்துவிட்டேன்’: விஜய் ஆண்டனி உருக்கமான அறிக்கை!

Pagetamil

நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி

Pagetamil

தீபாவளிக்கு வெளியாகிறது துருவநட்சத்திரம்

Pagetamil

அமீர்கான் தம்பி ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!