ரி20 போட்டிகளில் தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியடைந்து நொந்து போயிருந்த இலங்கை அணி இன்று, மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டியது.
இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளை கட்டிப்போட, 43 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தனுஷ்க குணதிலக்க 56 ஓட்டங்களையும் பதும் நிஸங்க 37 ஓட்டங்களையும் அசேன் பண்டார 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தினேஷ் சந்திமல், திசர பெரேரா ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் பிராவோ 25 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
பதிலுக்கு 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதிகபட்சமாக ஒபேய் மெக்கொய் 23 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். கிறிஸ் கெய்ல் 16, பொலார்ட் 15 ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் லக்ஸன் சந்தகன் 10 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 16 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர 26 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அகில தனஞ்ஜெய 13 ஓட்டங்களிற்கு 1 விக்கெட்.
ஹசரங்க ஆட்டநாயகன்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.