Pagetamil
இலங்கை

வவுனியாவில் முக்கிய வீதிகளிற்கு விடிவு!

வவுனியாவில் முக்கிய வீதிகள் காப்பற் இடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் குடியிருப்பில் இருந்து பூந்தோட்டம் சந்திவரையான வரையான 1.80 கிலோமீற்றர் வீதி, பூந்தோட்டம் சந்தியில் இருந்து மகாறம்பைக்குளம் வரையான 2.60 கிலோமீற்றர்வீதி, பூந்தோட்டம் சந்தியிலிருந்து கல்வியற் கல்லூரிவரையான 1.60 கிலோமீற்றர் வீதி, புதூரில் இருந்து பாலமோட்டை வரையான 25.75
கில்லோமீற்றர் நீளமான வீதிகளிற்கு காப்பற் அமைப்பதற்காக மாகாண குறித்தொதொதுக்கப்பட்ட நிதியில்இருந்து 95 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான ஒப்பந்தம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதிகளில் மகாறம்பைக்குளம் வீதி, மற்றும் பாலமோட்டை வீதிகள் நீண்டகாலமாக நிரந்தரமாக சீரமைக்கபடவில்லை. இதனால் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. பொதுமக்கள் அசௌகரியங்களுடனேயே பயணத்தை தொடரவேண்டிய நிலை ஏற்ப்பட்டிருந்தது. தற்போது அது புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை வந்ததும் அர்ச்சுனாவை பற்றி படித்த கீர்த்தி சுரேஷ்

Pagetamil

பணிப்பாளர் அசமந்தமா?: யாழ் போதனாவில் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

ரெலோவிலிருந்து விலக்கப்பட்ட விந்தன் தமிழரசு கட்சியில் இணைவு!

Pagetamil

யாழில் அதிர்ச்சி சம்பவம்: வைத்தியசாலை மனநோயாளர் விடுதியில் தங்கியிருந்த யுவதி வல்லுறவு குற்றச்சாட்டு; துப்புரவு பணியாளர் கைது!

Pagetamil

கனடாவில் நடந்த பயங்கரம்: யாழ் இளம்பெண்ணின் சோக முடிவு!

Pagetamil

Leave a Comment