மன்னாரில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த மீன் வியாபாரிக்கு கொரோனா!

Date:

மன்னாரில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மன்னார், சாந்திபுரம் பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில், மன்னார்- கொழும்பு புகையிரதத்தின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மன்னார் மீன் சந்தை கட்டட தொகுதியில் மீன் விற்பனையில் ஈடுபடும், சாந்திபுரத்தை சேர்ந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது சடலம் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, அவரது பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

அவரது சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை அது தகனம் செய்யப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை

மத்திய கிழக்கு மோதலால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டாலும், தற்போது நாட்டில் வீட்டிலிருந்து...

இலங்கையின் எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

மத்திய கிழக்கில் தொடர்ந்து பதட்டங்கள் தொடர்ந்தால், எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்கு உதவி...

விமான சேவைகள் நிறுவன முன்னாள் அதிகாரிக்கு விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்