பூமியின் வில்லன் கடந்து சென்றது!

Date:

2068 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள 340 மீட்டர் அகலமுள்ள “அபோபிஸ்” என்ற சிறுகோள் நேற்று இரவு பூமியைக் கடந்து செல்லும் என்று வானியலாளர்கள் எதிர்வுகூறியிருந்தனர்.

“அப்போபிஸ்” என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் நேற்று இரவு  பூமிக்கு 16 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பயணிக்கும் என்று வானியலாளர்கள் எதிர்வுகூறியிருந்தனர்.

ஜூன் 19, 2004 அன்று, அரிசோனாவில் உள்ள கிட் பீக் தேசிய ஆய்வகத்தில், வானியலாளர்கள் முதலில் சூரியனைச் சுற்றிவரும் “அபோபிஸ்” என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோளைக் கவனித்தனர்.

2068 ஆம் ஆண்டில் சிறுகோள் பூமியுடன் மோதுகக்கூடும் என்றும், இதன் தாக்கம் டிஎன்டி வெடிபொருளின் 880 மில்லியன் தொன் வெடிப்பை ஒத்ததாக இருக்கும் என்றும் வானியலாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த சிறுக்கோள் 2029 ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியிலிருந்து 37,000 கி.மீ தூரத்தில் பயணிக்கும்.

இவ்வளவு பெரிய சிறுகோள் பூமிக்கு அருகில் பயணிப்பது இதுவே முதல் முறை என்று நாசா மதிப்பிடுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.60 இலட்சம் செலவாகிறது!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான...

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்