கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கருகில் போதியளவு உணவின்றி காணப்படும்
குரங்களுக்கு நாளாந்தம் தனது வசதிகேற்ப உணவுகளை வழங்கி வருகின்றார்
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு.தர்மராஜா என்பவர்.
போதியளவு உணவின்றி குடிமமனைகளுக்குள் புகுந்து பயிர்களுக்கும் பயன்தரும்
பழ மரங்களுக்கும் சேதம் விளைவித்த வந்த குரங்களுக்கு அவற்றின்
இருப்பிடமான இரணைமடு குளத்தின் வான்பகுதிக்கு அருகில் சென்று உணவுகளை
வழங்கி வருகின்றார்.
நாளாந்தம் தனது வசதிகேற்ப வாழைப்பழம்,பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை வழங்கி
வரும் தர்மராஜா தான் வழங்கும் உணவுகள் அவைகளுக்கு போதுமானதாக இல்லை
எனவும் தன்னால் தனியே அங்குள்ள அனைத்து குரங்களுக்கும் உணவளிக்க
முடியாதுள்ளது என்றும் தெரிவிக்கும் அவர் வசதிபடைத்தவர்களும் இப் பணியில்
இணைந்து கொண்டால் மகிழ்ச்சி அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அங்குள்ள குரங்குகள் நாளாந்தம் தனது வருகைக்காக
காத்திருப்பதாகவும் தான் உணவுடன் சென்றால் சகஜமாக அருகில் வந்து உணவுகளை
பெற்றுச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இச் செயற்பாடு
மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.