பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோயாளர் விடுதி மூடப்பட்டது; 34 பேருக்கு கொரோனா!

Date:

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அ்ந்த விடுதியில் 34 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வைத்தியர், இரண்டு தாதியர்கள், ஏழு துணை வைத்தியர்கள், இரண்டு சுகாதார பணியாளர்கள் மற்றும் 22 நோயாளிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஒரு நோயாளி மற்றும் தாதி கொரோனா தொற்றிற்கு உள்ளானது கண்டறியப்பட்டதை தொடர்ந்து  நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்  34 பேர் தொற்றிற்குள்ளாகியது கண்டறியப்பட்டது.

இந்த சூழ்நிலை காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியை மூட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...

போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்